குழுவில் 29 வணிகங்கள் உள்ளன, இதில் பத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் NSE & BSE இல் வர்த்தகம் செய்யப்படுகின்றன. சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ள குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில், கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட், சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட், சோழமண்டலம் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட், சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், கோரோமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட், கோரமண்டல் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட், இ.ஐ.டி. பாரி(இந்தியா)லிமிடெட்,P பாரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், சாந்தி கியர்ஸ் லிமிடெட், டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் வெண்ட் இந்தியா லிமிடெட் ஆகியவை அடங்கும்.
அப்ரேஸிவ்ஸ், தொழில்நுட்ப செராமிக்ஸ், எலக்ட்ரோ மினரல்கள், ஆட்டோ பாகங்கள் மற்றும் சிஸ்டம்கள், பவர் கன்வெர்ஷன் கருவிகள், பவர் டி&டி பிரிவுக்கான டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் ரியாக்டர்கள் , ரயில்வேக்கான ரோலிங் ஸ்டாக் மற்றும் சிக்னலிங் கருவிகள் தேவைக்கான தீர்வுகள், சைக்கிள்கள், உரங்கள் , சர்க்கரை, தேநீர் மற்றும் ஸ்பைருலினா (ஊட்டச்சத்து மருந்துகள்). உள்ளிட்ட பல தயாரிப்புகளில் குழு தலைமைப் பதவியை வகிக்கிறது. குரூப் சிமிக் டியூனிசெய்ன், ஃபாக்ஸோர் , மிட்ஸூயி சுமிடொமோ, மார்கன் அட்வான்ஸ்டு மெட்டிரியல்ஸ், யன்மார்&கோ. மற்றும் கேம்பக்னி டெஸ் ஃபாஸ்பட் டி கஃப்சா (CPG) போன்ற முன்னணி சர்வதேச நிறுவனங்களுடன் குழு வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளது. முழுவதும் பரந்த விரிந்த இருப்பைக் கொண்டுள்ளது மற்றும் 6 கண்டங்களில் பரவியுள்ளது.
பிஎஸ்எ, ஹெர்குலிஸ்,மோண்ட்ரா, மேக் ஸிடி, பால்மாஸ்டர்,அஜாக்ஸ்,ரோடியஸ்,பாரிஸ், சோலா, குரோமோர்,சாந்தி கியர்ஸ் மற்றும் பரம்ஃபோஸ் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகள் முருகப்பா நிறுவனங்களில் இருந்து உருவாகி வந்தவை. குழுவானது தொழில்முறை சூழலை வளர்க்கிறது மற்றும் 83500+ பணியாளர்களைக் கொண்டுள்ளது.
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (TII) நாட்டின் முன்னணி பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாகும், இதன் தாயாரிப்புகள் மெட்டல்கள் தொடங்கி மொபிலிட்டி தீர்வுகள் வரை பரவியுள்ளது.
இது சைக்கிள்கள் தயாரிப்பில் முன்னணி உற்பத்தியாளராக உள்ளது, குழாய்கள், உலோகத்தால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சங்கிலிகள் ஆகியவற்றில் ஒரு பரந்த அளவிலான தொழில்நிறுவனங்களுக்கு விருப்பமான சப்ளையர். டிஐஐ முக்கிய OEM களுக்கு சேஃப்டி கிரிடிகல் பிரிஸிஷன் பாகங்களை வழங்குகிறது மற்றும் மின்சாரத் துறை, ஆஃப்-ரோடு பயன்பாடுகள், ஜவுளி இயந்திரங்கள் மற்றும் பொது பொறியியல் பிரிவுகளில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.
நிறுவனம் ‘டயமண்ட்’ பிராண்டுதயாரிப்புகளுடன் ஆட்டோமோட்டிவ் மற்றும் தொழில்துறை சங்கிலிகளில் முன்னணியில் உள்ளது. துல்லியம் மற்றும் உலகளாவிய தரத் தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவதற்கான திறன், நிறுவனத்தின் ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்துள்ளது. .பிஎஸ்எ, ஹெர்குலிஸ் லேடிபேர்ட் ரோடியோ,மந்த்ரா மாற்றும் மேக்ஸிடி போன்ற மதிப்புமிக்க பிராண்டுகளுடன், இந்தியாவில் சைக்கிள் ரீடெய்ல் விற்பனையில் Tl I ஒரு முன்னோடியாக உள்ளது. TII அதன் துணை நிறுவனமான சாந்தி கியர்ஸ் லிமிடெட் மூலம் இந்தியாவில் தொழில்துறை கியர்ஸ் பிரிவில் செயல்படுகிறது மற்றும் CG பவரை இணைத்துக் கொண்டதன் மூலம் வாகனத்துறை அல்லாத பொறியியல் இருப்பை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.